தாய்ப்பசு
தாய்ப்பசு
########
நள்ளிரவில் உறக்கமின்றி
நிற்கிறாள்
நிலைக்குலைந்து தெருமுனையில்
கண்ணுக்கு எட்டியத் தூரம்
யாருமில்லை
கதறி அழும் சத்தம்
அபயக்குரலாய் கேட்கிறது
அவள் செவியில்
நாற்புறமும் திரும்பி பார்க்கிறாள்
நிசப்த இரவில்
ஒலிக்கேட்கும் திசையில்
வேகமாய் நடக்க முயற்சித்தும்
அழுகிய அங்கம்
அசைந்து வருகிறது
மெல்லிய இடையில்
முயற்சித்து கொண்டிருக்கிறது
குட்டியை ஈன்றிட பசு
வலியில் கண்ணீர் பீறிட
அம்மாவென்று மீண்டும் கத்தியது
அதே அபயக்குரல் என
உதவிட விரைந்து வந்தாள்.
பசு ஈன்றக் குட்டியைப்
பார்த்ததும் அகமகிழ்ந்து
முத்தமிட்டு
மார்போடு அணைத்து மண்ணில் வீழ்ந்தாள்;
அழுகிய உடலை அன்போடு நக்கியது
அம்மாவென்று கன்றுக்குட்டி.
#சரவிபி ரோசிசந்திரா