வாழ்க்கை

வாழ்க்கை ,
பொருந்தாத மூடிக்கும் , ஜாடிக்கும்
ஜோடிதான் வாழ்க்கை .............

இங்கு சிரிப்பவன் அழுகிறான்
அழுபவன் சிரிக்கிறான் ...........

நல்லவன் கெட்டவன் என்பது எல்லாம்
பண்புகளால் பெற்றவை அல்ல
பணத்தால் பெற்றவை ............

உழைத்தவன் இலைப்பதும்
வலித்தவன் பிழைப்பதும் இங்கு வாடிக்கை ..............

நேர்மைக்கு
நேர்மறையான பலன்களே
இந்த வாழ்க்கையின் வழக்கம் ............

மிருகங்களின் கொடூரத்தை கண்டுவிட்ட மனிதனுக்கு
மனிதனின் மர்மத்தை அறிவதுதான்
அத்தனை ரகசியம் .............

வெகுளி என்றவரெல்லாம்
விஷமிகள் என்று புரிவதற்குள்
மனித வாழ்க்கையே முடிந்துவிடுகிறது.................

எழுதியவர் : விநாயகமுருகன் (30-Aug-20, 6:45 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
Tanglish : vaazhkkai
பார்வை : 659

மேலே