அற்புதமான தத்துவம்
🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜
*என் மொழி*
படைப்பு *கவிதை ரசிகன்*
🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜
யாருக்கும்
கொடுத்து வாழாமல்
போனாலும்....
யாரையும்
கெடுத்து
வாழ்ந்து விடாதே.....!
கொடுத்தது கை விடாது...
எடுத்தது கை கொடுக்காது....
🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣
வெல்லும் போது
கை கொடுக்கும்
கைகளை விட...
தோற்கும் போது
தட்டிக்கொடுக்கும்
கைகளே சிறந்தது....!
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
நாம் செய்த
தப்புக்காக
எத்தனையோ முறை
மன்னிப்பு கேட்டிருக்கிறோம்.....
அது சரி....
நாம்
எத்தனை பேர்களை
மன்னித்திருக்கிறோம்...?
🦩🦩🦩🦩🦩🦩🦩🦩🦩🦩🦩
அளவுக்கு
அதிமாக
நாம்
சாப்பிடும் போது....
யாரோ ஒருவர்
பட்டினியாகக்
கிடக்கப்போகிறார் என்பதை
நாம்
அறிவதே இல்லை....!
🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢
எத்தனை முறை
தோற்றாலும்
கவலைப்படாதே!
ஏன் எனில்...?
அந்த அளவுக்கு
உன் வெற்றி
உறுதிச் செய்யப்படுகிறது....!
🦃🦃🦃🦃🦃🦃🦃🦃🦃🦃🦃
தேடி வந்து
கேட்பவர்களிடம்
சொல்கின்ற வார்த்தைகள்
என்றுமே!
வீண் போவதில்லை....
தேடிச்சென்று
சொல்கின்ற வார்த்தைகளால்
எதுவுமே!
விளையப்போவதில்லை...
*கவிதை ரசிகன்*
🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜