அம்மா

வெள்ளி கிண்ணத்தில்
உணவு ஊட்டி
வெள்ளைக்கார
சீமைக்கு வேலைக்கு
அனுப்பி
வெங்கல வட்டியில்
சாப்பாடு பிசைந்துகிட்டே
ஓருவாய் சாப்பிடு கண்ணுயென்று
IMO வில் கேட்கிறாள்
ஐ கே டிட் யென்று
அவன் தலைஅசைக்க
கெட்டுப் போய்விடாதே
கண்ணே யென்று
கண்ணீரோடு கரம் கூப்பும்
கனவு தெய்வம் அம்மா.

எழுதியவர் : இரா.அரிகிருஷ்ணன் (31-Aug-20, 11:14 pm)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
Tanglish : amma
பார்வை : 49

மேலே