சொட்டு சொட்டாய் வடித்த என் கண்ணீர் துளிகள் 555
நினைவுகள்...
கண்டதும் காதல் மலருமா
என்ற என் கேள்விக்கு...
உன்னை கண்டதும் எனக்கு
பதில் கிடைத்தது...
தினம் தினம் உன்னெதிரில்
வந்து செல்வேன்...
நண்பனின் காதலுக்கு தைரியம்
சொன்னவன் நான்...
என் காதலுக்கு
நான் கோழையாக...
கோழையான
என் இரவினில்...
சொட்டு சொட்டாய் வடித்த
என் கண்ணீர் துளிகள்...
திட்டு திட்டாய் காலையில்
என் தலையணையில்...
நீயாக உன் காதலை
சொன்ன நாளில்...
என் தலையணை மட்டுமல்ல
என் கம்பளியும் நனைந்ததடி...
ஆனந்த கண்ணீரில்...
கோபம் சண்டைகள்
வந்து சென்றாலும்...
இன்று நீயும் நானும் ஒரே
வீட்டில் கணவன் மனைவியாக...
அந்த நாட்கள்
இன்னும் என் நினைவினில்...
என் உயிரில்
கலந்த என் உறவே.....
முதல் பூ பெ.மணி.....