மறந்த உன்னை மறக்காத என் இதயம் 555
என்னுயிரே...
உன்னை எப்போதும் தொடரும்
உன் நிழலை போல...
உன்னை தொடர
நினைத்தேன்...
நீயோ இருளில் மறையும்
நிழலைபோல என்னை மறந்தாய்...
தொட்டு விட முடியாத
தூரத்தில் நீ இருந்தும்...
உன் நினைவுகள் என்னை
தொடர்வதேனடி...
என்னை மறந்த உன்னை
நான் மறக்க நினைத்தாலும்...
உன்னை நேசித்த
நினைவுகள் அவ்வப்போது...
உன்னை
நினைவு படுத்துதடி...
மறந்த உன்னை
மறக்காத என் இதயம்.....
முதல் பூ பெ.மணி.....