என் கன்னத்தில் பதிந்த கண்ணீரின் வடுக்கள் 555

பெண்ணே...


மண்ணில் விழும் மழைத்துளிகளை
நீ கைகள் நீட்டி ரசித்தாய்...

நான்
உன்னை ரசித்தேன்...

உன்னுடன் சேர்ந்து ரசித்த
மழைத்துளிகளை விட...

இன்று நான்
தனிமையில் ரசிக்கும்...

மழைத்துளிகளே எனக்கு
சந்தோசம் கொடுக்குதடி...

என் கன்னத்தில் பதிந்த கண்ணீரின்
வடுக்களை கரைக்கவே...

அவ்வப்போது
செல்கிறது எனக்காக பூமிக்கு...

பிடிக்கவில்லை என்று
சொல்லி இருந்தால்...

உன்னை பின் தொடராமல்
சென்று இருப்பேன்...

பிடித்திற்கு
என்று சொல்லி...

என்னை பித்து பிடிக்க
வைத்துவிட்டாயடி...

மழையில் கலந்து செல்லும்
என் கண்ணீரை நீ உணர்வாயா.....முதல் பூ பெ.மணி.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (30-Aug-20, 10:13 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 496

மேலே