காதல் தோல்வி கவிதை

💔💔💔💔💔💔💔💔💔💔💔

*காதல் தோல்வி கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

💔💔💔💔💔💔💔💔💔💔💔
கன்னத்தில் வடிந்த
கண்ணீர் துளி
இதழ் மீது விழுந்தது...
கண்ணீர் துளி கூட
இனிப்பாக இருந்தது...
ஆம் பெண்ணே!
அந்த கண்ணீர்
உன் நினைவால்
வடிந்தது அல்லவா....?

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
பெண்ணே!
இப்போதெல்லாம்
என் முகத்தை
நான்
கண்ணாடியில்
பார்ப்பதே! இல்லை...
ஆம்...!
உனக்கே!
பிடிக்காத முகத்தை
நான் மட்டும்
எப்படி பார்ப்பேன்...?

💟💟💟💟💟💟💟💟💟💟💟

காலம்
எதையும்
மறக்கச் செய்து விடும்
என்று சொல்வார்கள்...
அப்படிப்பட்ட காலமே!
தோற்றுத்தான்
போனது பெண்ணே!
உன் நினைவுகளிடம்....!

💓💓💓💓💓💓💓💓💓💓💓
தேனீக்கு தெரியுமா
தேனின் இனிமை?
மரத்திற்கு தெரியுமா?
நிழலின் குளுமை?
செடிக்குத் தெரியுமா
மலரின் பெருமை ?
பசிக்குத் தெரியுமா
ஏழையின் வறுமை ?
அடிப் பெண்ணே!
உனக்கு தெரியுமா
என் காதலின் அருமை...?

💖💖💖💖💖💖💖💖💖💖💖

பெண்ணே!
உன்னை போல்
என்னால்
நம் காதலை
மனதுக்குள் போட்டு
புதைக்க முடியவில்லை...
அதனால்
மண்ணுக்குள் போட்டு
புதைத்து விட்டேன்
" என்னையே...!"


*கவிதை ரசிகன்*

💔💔💔💔💔💔💔💔💔💔💔

எழுதியவர் : கவிதை ரசிகன் (3-Sep-20, 9:04 pm)
பார்வை : 247

மேலே