காதல்
தினந்தோறும் நான் பார்க்கும் வனப்பு வஞ்சி
என்மனது அன்றே அவளிடம் தஞ்சம்
என்று முதல் முதல் அவளை
நான்பார்த்த அன்றே அந்தோ அவளோ
இன்றுவரை என்னைக் கண்கொண்டு பார்க்கவே
நானும் எப்படி எல்லாம் முயன்றும்
வித விதமாய் முடியலங்காரம் ஆடைகள் என்று
இன்று விடாய் போவதில்லை அவள்முன்னே
நிற்பேன் என்று அவள்முன் நிற்க
என்னை கொஞ்சம் நின்று தவிர்த்து
முன்னே நடந்து சென்றாள் அவள் .......
இப்போதுதான் புரிந்தது ஏன் என்று
பாவம் அவள் அழகுதந்த இறைவன்
இப்படியோர் அநியாயம் செய்ததேனோ