காதலின் கண்ணீர் துளிகள்

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

*காதல் தோல்வி கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

பெண்ணே!
நான்
உண்மையாகத்தான்
உன்னை நேசித்தேன்
ஆனாலும்...
நீ என்னை
நேசிக்கவில்லை....
அதற்காக
தாடி விட்டு
புகை பிடித்து
தண்ணி அடிச்சி
வாழ்க்கையை
சீரழித்து
என் காதலை நிருபிக்க
நான் விரும்பவில்லை
ஏன் எனில்....
நான்
மனிதனாக பிறப்பது
ஒரு முறை தான்....

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

மனைவியின்
நிஜத்தோடு
வாழ்கின்றவர்களில்...
பலர்
காதலியின்
நினைவோடும்
வாழ்ந்து கொண்டு தான்
இருக்கிறார்கள்....!!!

🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡

காதலித்தவர்களில்
சிலர்
காதலியோடு வாழ்கிறார்கள்...

பலர்
காதலியின்
நினைவோடு வாழ்கிறார்கள்....

ஒருசிலர்
காதலோடே வாழ்கிறார்கள்...!

எப்படியானாலும்
காதல் தரும் சுகத்தில்
வேறுபாடு இல்லை.....!!!

💚💚💚💚💚💚💚💚💚💚💚

பெண்ணே.!
கடிதமாய் வந்தேன்
கிழித்துப் போட்டாய்...

தென்றலாய் வந்தேன்
சன்னலை சாத்தி வைத்தாய்....

ரோஜா மலராய் வந்தேன்
தூக்கி எறிந்தாய்....

மழையாய் வந்தேன்
குடைப்பிடித்தாய்......

மௌமாய் வந்தேன
கண்டபடி திட்டினாய்.....

பிணமாய் வருகிறேன்
கண்ணீர் வடிக்கின்றாயே...?

💙💙💙💙💙💙💙💙💙💙💙

பெண்ணே!
உன்னால்
இறந்ததை நினைத்து
நான்
வருத்தப்படவில்லை...
இன்னொரு முறை
இறப்பதற்கு
வாய்ப்பில்லையே! என்று
வருத்தப்படுகிறேன்....
ஆம்....!
எனக்காக
நீ
இரண்டு சொட்டு
கண்ணீர் விட்டாய் அல்லவா....?

*கவிதை ரசிகன்*

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

எழுதியவர் : கவிதை ரசிகன் (6-Sep-20, 7:14 pm)
பார்வை : 249

மேலே