இறைவன் நாமம் நம்மைக் காக்கும்

இன்று உலகமே கொரோனா என்னும்
கண்களுக்கு புலனாகா அசுரனின் பிடியில்
சிக்கி தவிக்கின்றது அன்று வரங்கள்
பல பல பல தெய்வங்களிடம்
பெற்று ஆணவத்தில் ஆடிவந்த அசுரர்கள்
இந்திரன் ஆதி தேவர்களையே சித்ரவதை
செய்ததுபோல இதிலிருந்து நாம் மீள
ஒரே வழி இறைவன் நாமத்தை
வானம் முட்ட ஓதி துதிப்பதேயாகும்
துதிப்போர்க்கு வல்வினைப்போம் தூயவன்
கொரோனாவை வதைத்திடுவான் அதன் வேரோடு
பிணியெல்லாம் நீங்கி மக்களும் இனிதே
நீடு வாழ்வார் அன்றுபோல் இன்றும் என்றும்
போற்றிப் பாடுவோம் இறைவன் நாமம்
கண்மூடி மனம் திறந்து உளம் உணர்ந்து
'அவன்' மனம் இறங்கும் உறுதி
நம் இன்னல்கள் எல்லாம் தீயில்
பொசுங்கிய பஞ்சுபோல் ஆகுமே இன்னும்
ஏன் தயக்கம் இறைந்து பாடுங்கள்
'அவன்' நாமம் என் இனிய மக்களே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Sep-20, 4:51 pm)
பார்வை : 60

மேலே