உலகத்தார் யாவருக்கும்

அம்மையும் அப்பனும் பிள்ளைகளை பண்பாய் வளர்த்தால்
அகிலத்தில் உயிர்களுக்கு என்றும் துன்பமே இல்லை
சட்டங்கள் என்றும் தர்மத்துக்கு எதிராய் பேசும்
சவலைப் பிள்ளை போலே தர்மம் தலை குனிந்தே வாடும்
அறிவை பெருக்காதோர் அருகாமை துயரை ஊட்டும்
அறிவில் சிறந்தோர் பொறாமை துன்பத்தைக் காட்டும்
சொல்லை ஆராயும் அளவிற்கேணும் மொழியறிவு வேண்டும்
உலகத்தார் யாவருக்கும் பிறையளவே பொது சிந்தனை தோன்றும்
துவளாமல் உழைத்திட இங்கு தூயமனம் படைத்தோர் குறைவே
அரசின் சொத்துக்களை அபகரிக்க நினைப்போர் கோடி
சிறந்தவராய் வாழ நாமும் சிந்தனையை பெருக்குவோமே.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (8-Sep-20, 11:13 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 44

மேலே