மருத்துவத்திற்கான இடத்தேர்வு

அணிகலன்கள் அணிந்து அவசரமாய்
அணிவகுத்து அரசின் தேர்வுக்கு செல்ல
அணிகலன் முதல் துணிமணிவரை களைய
அணி அணியாய் ஊழியர்கள் ஆங்காங்கே

உணவுக்கும் உணர்வுக்கும் இடமில்லை
உரிமையும் உடமையுங்கூட அலங்கோலமாய்
உறவும் உரியவர்களும் பள்ளி ஓரமாய்
உதயமாகும் புதிய வாழ்வுக்காக தேர்விற்கு

மாநிலம் சார்ந்த கல்லூரிகளில் இடமென்பது
மாநில மாணவர்களுக்கு நூற்றில் எண்பத்தைந்து
மாணவர்களை தேர்ந்தெடுக்கவே மதிப்பெண் தேர்வு
மாபெரும் போட்டி என்பதால் தேர்வு கடுமையாய்

மற்றைய மாநிலத்தவருக்கு நூற்றில் பதினைந்து
மறுக்க முடியாத அரசாங்கத்தின் திட்ட சேர்க்கை
மதி குழப்பும் வேலையில் மாறிய மாநில ஊடகங்கள்
மக்களை குழப்பும் மகோத்தமான அரசியல் கட்சிகள்

விளையாடாதீர்கள் வீணாக மாணவர்களோடு
விளக்கமளித்து தேற்றுங்கள் கிராம மாணவர்களை
வீரியம் மிக்கவர்கள் வெற்றியை முத்தமிடுவார்கள்
வீழ்த்துவதற்கு காரணமாகதீர்கள் விலகி செல்லுங்கள்
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (13-Sep-20, 11:09 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 29

மேலே