காதல்
கொஞ்சும் பூரண எழிலாய்
வஞ்சி யவள் என்னெதிரே
நெஞ்சினிலே என்னையே நினைப்பவள்
போல நான் எண்ணும் வகையில்
கொவ்வை இதழோரம் சிந்தும்
தேனாய் முத்தாய்ப் புன்னகைத்தாள்
நான் பார்த்தேன் அவளும் நோக்க
நெஞ்சம் இரண்டும் அக்கணமே
சேர்ந்திட காதல் வந்தது
எங்கள் மனங்கள் நிறைய -இதோ
நாணம் கொஞ்சம் தாக்க
பெண்மான் அவள் துள்ளி
ஓடி எங்கோ மறைந்தாள்
நாளை வருவாளோ அவள்