காற்றின் மீதேறி
ஆராய்ந்து படித்திடுவோம் அனைத்து கலைகளையும் கற்றிடுவோம்
அறிவின் செறிவினாலே நோய்கள் அனைத்தையும் விரட்டிடுவோம்
விரைந்து புரிந்துக் கொள்வோம் வேண்டியதை சேகரிப்போம்
ஆழி நீரால் வாகனத்தை அற்புதமாய் ஓடச்செய்து ஆர்ப்பரிப்போம்
காற்றின் மீதேறி காணுமிடம் சேர்ந்திடவே கலன் பல செய்திடுவோம்
ஒளி கொண்டு உணவு செய்து பகுத்துண்டு உயிர்வாழ பண்ணிடுவோம்
காகித காசை காணாததாக்கி கொடூர களவாளிகளை ஒழித்திடுவோம்
உலக இயக்கத்தினை பழுதின்றி பாதுகாக்க உறுதியை ஏற்றுடுவோம்.
------ நன்னாடன்.