கனவு நினைவாகுமா
நாம் நமது பெற்றோரிடமோ அல்லது நமக்கு நெருக்கமானவரிடமோ எதிர்காலத்தில் நாம் எவ்வாறெல்லாம் இருக்க வேண்டும், எவ்வாறு ஆகா வேண்டும் என்று கூறுகையில் அதிக முறை இந்த வார்த்தை நம் காதில் ஒளித்திருக்கும் "பகல் கனவு காணாதே", இதற்க்கு காரணம் நாம் அதை சாத்திய படுத்த எந்த முயற்சியும் எடுக்க மாட்டோம் என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள். சிறு வயது முதல் நாம் காண்கின்ற கனவுகள் ஏராளம், ஆனால் அவை நாம் வளர வளர பல மாற்றத்தை அடைகின்றன. நாம் கால போக்கில் நம் குடும்ப சூழ்நிலை சரி இல்லை அல்லது வேறு சில காரணங்களுக்காக அவற்றை விட்டு விடுகிறோம்.
வாழ்க்கையில் கனவை உண்மையாக்க மனம் தளராது போராடுபவர்களுக்கே வெற்றி கிடைக்கிறது. அதற்க்கு அவர்களின் திட்டமிடலும், விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் முக்கிய பங்காற்றி இருக்கும். இவ்வாறு வெற்றி பெற்றவர்களின் வெற்றி கதைகள் ஏராளம். ஆனால் நம்மில் பலர் முயற்சிப்பதே இல்லை, இன்னும் சிலர் முயற்சித்து பாதியில் விட்டுவிடுகிறோம். வாழ்வில் வெற்றி அடைய கொஞ்சம் காலம் எடுக்கத்தான் செய்யும் அந்த காத்திருப்பும்,முயற்சியும் நம்மிடத்தில் இல்லை என்பதே உண்மை.
இப்போதைய வாழ்க்கை நிலைமையில் நாம் எதிர் பார்த்ததும் ஆனால் நடந்து கொண்டிருப்பதும் நமக்கு மனவேதனையை ஏற்படுத்தலாம், அதற்கு காரணம் நாமாகவே இருப்போம் நாம் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த எந்த முயற்சியும் எடுக்காமல் தயங்குவதே காரணமாக இருக்கும். இப்பொழுதும் நம் கனவுகளை நிறைவேறிட்ட ஏதேனும் வழி கண்டிப்பாக இருக்கும் அவற்றை நாம் தான் தேடிப்பிடிக்க வேண்டும். யாரையும் குறை கூறிப் பயனில்லை. தன்னம்பிக்கையுடன் நடப்பதை எதிர் கொண்டு உங்கள் கனவுகளை நினைவாக்க முழு மூச்சுடன் செயல்பட்டால் வெற்றி தேடி வரும். காலம் கடத்தி காத்திருப்பதால் பயனில்லை. மனதின் முழு கவனத்தை உங்கள் கனவுகளின் மீது செலுத்துங்கள் படிப்படியாக இலக்குகளை நிர்ணயுங்கள், தவறு ஏற்பட்டால் திருத்திக்கொள்ளுங்கள் மாறாக நிறுத்தி விடாதீர்கள் நண்பர்களே...உங்களின் ஈடுபாடு முழுமையாக இருந்தால் அது கண்டிப்பாக உங்கள் கனவை நினைவாக்கும்.