புன்னகைக்க மறந்து விட்ட பூக்கள்

புன்னகைக்க மறந்து விட்ட பூக்கள்

ஆறு மாதங்களாய் பூக்கள்
புன்னகைப்பதில்லை
பூக்கும் தோட்டத்தில்
மொக்கு முளைக்கும் முன்
ஒடித்து விடப்படுகிறது
முளைத்து விட்ட மொக்குகள்
மூழ்கடிக்கப்படுகிறது
தவறி மலர்ந்து விட்ட
மலர்கள் மண்ணுக்கு உரமாக
போய் விடுகிறது
கடவுள் சிலைகள் கூட
மாலை சூட மறந்து விட்டது
பெண்ணின் கூந்தல் கூட
பூக்களை விலக்கி வைக்கிறது
திருமணங்கள் விழாக்கள்
பூக்களை வெறுக்கிறது
அங்கங்கு பூ விற்கும்
கடைகள் பூவிழந்து விட்டது
போல் நிற்கிறது

மனிதனையே நம்பி வந்த
இயற்கைகளில் இதுவும்
ஒன்று

மனிதனே மறந்து
விட்ட பின்னால்

பூக்கள் புன்னகைக்க
மறந்து விட்டன

எழுதியவர் : தாமோதரன் ஸ்ரீ (11-Sep-20, 1:37 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 270

மேலே