கொரானா வைரஸாட்டும் தாக்குற
ஏன்டி என்ன பாக்குற!
கொரோனா வைரஸாட்டும் - என்ன தாக்குற!
காதல் என்னும் காய்ச்சல் தந்து என்ன மெரட்டுற!
என்ன மட்டும் தனிமைபடுத்தி
மனச வாட்டுற!
தொத்து நோய் போல என்ன தொரத்துரியே!
பத்து நாளா தனிமை படுத்தி மெரட்டுரியே!
காதல் என்னும்
காய்ச்சலுல வாட்டுறியே!
108ஆம்புலன்சில்
ஏத்துரியே!
கொரோனா வில் பாதிச்சவன் ரெண்டுகோடி!
காதல் வைரஸில் பாதிச்சவன் பல கோடி!
தொட்டா பரவுதடி கரோனா!
பார்வ பட்டா போதும்
நீதான் காதல் கொரோனா
மூச்சு காத்தா அடைக்கிறிய!-எனக்கு
ஆக்ஜிஜன் சிலிண்டர் மாட்டுறியே!
மாஸ்க்க மாட்டி
பாக்குறன்டி!
மனச சைனஸர் போட்டு
கழுவுரண்டி!
கவிஞர்.....
மன்னை மாயா

