மாவீரன் நெப்போலியனும் எலியும்

உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் நாட்டின் மாவீரன் நெப்போலியன் பிரிட்டிஷ் படையை எதிர்த்து நடத்திய போரில் தோல்வி அடைந்து, சிறை பிடிக்கப்பட்டான். பிரிட்டிஷ் ராணுவம் அவனை ஆப்பிரிக்க மண்ணில் தனிச்சிறையில் அடைத்து வைத்தது.

நெப்போலியன் தனிமை படுத்தப்பட்டு, சிறையில் மிகுந்த மன உளைச்சலோடு தன் கடைசி காலத்தை கழித்து வந்தான். அவரை பார்க்க ஒரு நாள் அவரின் நண்பர் ஒருவர் சிறைச்சாலைக்கு வந்தார். அவர் நெப்போலியனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, போகும்போது
ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து, உங்களுக்கு சதுரங்க விளையாட்டு பிடிக்கும், மேலும், இது உங்கள் சிந்தனையை தூண்டி செயல்பட வைக்கும், தனிமையை போக்கும் என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்.

ஆனால், தன்னை சிறைப்படுத்தி தனிமை படுத்தி விட்டார்களே என்ற
மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல்
தன் நண்பர் கொடுத்த சென்ற "சதுரங்க அட்டையை" பிரித்துக்கூட பார்க்காமல் அப்படியே வைத்து விட்டார். அப்புறம், அதன் மீது அவர்
கவனம் செல்லவில்லை. சிறிது காலத்தில் இறந்தும் போனார்.

பிற்காலத்தில், பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த "சதுரங்க அட்டையை" ஏலம்விட எண்ணி
அதனை ஆய்வு செய்தபோது, அந்த அட்டையின் நடுப்பக்கத்தில், மிக
சிறியளவில், சிறையில் இருந்து தப்புவதற்கான வழிமுறை குறிப்புகள்
அதில் சொல்ல பட்டிருந்தது. ஆனால், மிகுந்த மன உளைச்சலும்,
பதற்றமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் செய்து, தப்பிக்கும் வழிபற்றிய குறிப்பு கையில் இருந்தும் பயன்படாமல் போய்விட்டது.

--இது நெப்போலியன் கதை...இப்போ எலி கதைக்கு வருவோம்.

எலியானது உறுதியான சிமெண்ட் தரையையும், மரப்பெட்டியையும்
தன் கூர்மையான பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போடும் குணம் கொண்டது.

ஆனால், அதே எலி மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கி
கொண்டால், அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதற்றத்திலும்
எலிப்பொறியை குடைந்து தப்பி செல்லும் வழியை விட்டு விட்டு, அந்த பொறியின் கம்பிக்குள் சிந்தனை எதுவும் செய்யாமல் முன்னாலும், பின்னாலும் ஓடிக்கொண்டே இருக்கும்.

எனவே, இந்த கதையின் கருத்து என்னவென்றால்...மாவீரன் நெப்போலியனும் சரி, சாதாரண எலியும் சரி...பதற்றமும், மன உளைச்சலும் சிந்தனையை செயல்படாமல் வைத்து, அவர்களின் முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விட்டது.

பதறிய காரியம் சிதறிப்போகும் என்ற பழமொழி இந்த கதைக்கு மிகவும் பொருந்தும்,
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (15-Sep-20, 7:59 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 297

மேலே