எச்சரிக்கை உயிர் பத்திரம்

இரவுப் பயணம்
உயர் ரகக் கார்
இலவச சவாரி!

நடுநிசி
கார் நிற்கிறது
டிரைவர் இறங்குகிறார்!

நானும் இறங்குகிறேன்
கையில் கத்தியுடன் டிரைவர்
நான் கத்த முயற்சி!

தப்பிக்கும் வழி தேடி
பார்க்கிறேன் - கீழே
பள்ளத் தாக்கு!

திடுக்கிட்டு விழிப்பு வந்தது!
நல்லவேளை! எல்லாமே கனவுதான்!
நான் பிழைத்துக் கொண்டேன்!

இலவசம் வேண்டாம்
இரவுப் பயணம் தவிர்ப்பீர்!
எச்சரிக்கை! உயிர் பத்திரம்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Sep-11, 8:44 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 291

மேலே