முத்தம் - ஹைக்கூ விளக்கத்துடன்
கன்னம் சிவக்க
அழுத்தமாய்
முத்தம்
© ம. ரமேஷ் ஹைக்கூ
ஹைக்கூ வாசிப்பு முறைபடி முதல் இரண்டு வரிகள் எடுத்துக்கொள்வோம்.
“கன்னம் சிவக்க
அழுத்தமாய்”
என்ன ஆச்சி... கன்னம் சிவக்க அழுத்தமாய்,
யாராவது அடித்தார்களா?
ஏன் அடித்தார்கள்?
எதற்காக அடித்தார்கள்?
யாரையாவது அடிக்க போய் தவறி மற்றவர்மேல்...
பாடம் படிக்க/எழுதவில்லை என்று ஆசிரியர்...
அல்லது கணவன் மனைவிக்குள்...
ஒரு முடிவுக்கு வர முடியவில்லை!
குழப்பத்தோடு ஹைக்கூ வாசிப்பு முறைபடி முதல் இரண்டு வரிகளை,
(“கன்னம் சிவக்க
அழுத்தமாய்”)
மீண்டும் படித்து விட்டு மூன்றாம் அடியைப் படிக்கிறோம்.
“முத்தம்”
“அட, அடிகிடியெல்லாம்” இல்லை. முத்தம் தான்.
கன்னம் சிவக்க
அழுத்தமாய்
முத்தம்
சரி... முத்தத்திற்கு வருவோம்.
கன்னம் சிவக்க அழுத்தமாய் யார் முத்தம் கொடுத்தது.
காதலன் காதலிக்கா... காதலி காதலனுக்கா?
கணவன் மனைவிக்கா... மனைவி கணவனுக்கா!?
குழந்தைக்கா? குழந்தைக்கு என்றால் யார் கொடுத்து?
குழந்தை முத்தம் கொடுப்பதாக நினைத்து கொடுக்கத் தெரியாமல் கன்னம் சிவக்கக் கடித்து விட்டதா?
கன்னம் சிவக்க அழுத்தமாய் முத்தம் கொடுத்தது முன்னாள் காதலர்களா?
சாதாரணமாகக் கொடுக்காமல் ஏன் அழுத்தமாய்க் கொடுத்தார்கள்?
சரி... சரி... நானே எல்லாவற்றையும் விளக்கிக் கொண்டிருந்தால் சரியாக இருக்காது. மேலும் பல சிந்தனைகளை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
(ஹைக்கூ என்பது இப்படிப் பல சிந்தனையாகவும், கவிஞனுடைய ஹைக்கூவை வாசகனும் அனுபவிக்கும் விதமாகவும் படைப்பதே உண்மையான ஹைக்கூ ஆகும். ஹைக்கூக் கவிஞனுமாவான்.)