வாழ்க்கை நெறி
உள்ளத்தில் வசிப்பவனை
ஊரெங்கும் தேடாதே!
கொடுக்க மனமின்றி
கோவிலுக்குச் செல்லாதே!
நினைக்க யாருமின்றி
நிலவுலகில் வாழாதே!
தவிக்கின்ற வாய்க்கு
தண்ணீர் மறுக்காதே!
தன்னிலை இழந்தாலும்
தன்மானம் இழக்காதே!
பசிக்கு யாசித்தால்
பகுத்துண்ண மறவாதே!
பேர் புகழ் போதையில்
பேதலித்து நிற்காதே!
பணத்தைச் சேகரிக்க
பாசத்தைத் தொலைக்காதே!
நயவஞ்சகம் செய்து
நல்லவராய் நடிக்காதே!
பாரினைத் தந்தாலும்
பாதகத்தைச் செய்யாதே!
நலமாய் வாழ்வதற்கு
நம்பியவரைக் கெடுக்காதே!
உடலை துன்புறுத்தி
உண்ணாநோன்பு இருக்காதே!
உண்மை தெய்வமென
உணரத் தவறாதே!
பெற்றோருக்கு எதை அளித்தாலும்
பெற்றக்கடன் கழியாதே!