இனிதே உறங்கும் வேளையிலே

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

புனிதர் வேலா யுதனாரின்
போற்றும் மூத்த மகனாவார்!
இனிய பண்பின் அடையாளம்
எங்கள் ஆவு டையப்பன்!
கனிந்த குணங்கள் உள்ளவராம்
காட்சிக் கெளிய நண்பராம்!
இனிதே உறங்கும் வேளையிலே
இன்ன லின்றி உயிர்நீத்தார்!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Sep-20, 9:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 97

மேலே