பேரானந்தம்
காணும் பொருளிலெல்லாம் நீதான் தெளிந்தேன்
என்னுள்ளும் நீதான் உறைகின்றாய் அறிந்துகொண்டேன்
உனைக் கண்டுகொண்ட என்னை ஆட்கொண்டு
என்னை நல்வழியில் நடத்துகின்றாய் கண்ணபெருமானே
ஸத் சித் ஆனந்தமே எனைஆட்கொண்டாய்
பேரானந்தம் இது என காட்டி