நெல்லை பருப்புக் குழம்பு
இன்று எங்கள் வீட்டில் நெல்லை பருப்புக் குழம்பு.....
செய்வதற்கு மிகவும் எளிது....
இன்னும் இன்னும் என்று கேட்கத் தூண்டும் குழம்பு.....
தேவையானவை.....
(1)நீங்கள் வழக்கமாக உங்கள் வீட்டிற்கு சாம்பார் செய்ய எடுத்துக் கொள்ளும் துவரம் பருப்பில் பாதியளவு
(2)ஒரு கையளவு சின்ன வெங்காயம்
(3) நான்கு தோல் உறிக்காத பூண்டுப்பல்
(4) நான்கு பச்சை மிளகாய்
(5)ஒரு பெரிய நறுக்கிய தக்காளிப்பழம்
(6) சீரகம் ஒரு தேக்கரண்டி
(7) சிறிதளவு பெருங்காயம்
(8) இலேசாக அரைத்த இரண்டு சில்லு தேங்காய் மற்றும் சீரகம்
(9)கொஞ்சம் கரைத்தப்புளி
(10)இரண்டு மூன்று பிஞ்சு கத்திரிக்காய் (காட்டாயம் இல்லை)
(11) தாளிக்க இரண்டு மிளகாய் வத்தல்
(12) கறிவேப்பிலை கொத்தமல்லி தழைகள்
செய்முறை.....
கழுவிய துவரம் பருப்புடன் சிறிய வெங்காயம் , பச்சைமிளகாய், தக்காளி, பூண்டு, சிறிது பெருங்காயம் , சீரகம், கத்திரிக்காய் சேர்த்து வேகவைத்து எடுத்துவிடவும்.... அதை குழிக்கரண்டியால் மசித்து , கரைத்தப் புளியை சேர்க்க வேண்டும்..... கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடனாப்பின்பு கடுகு, மிளகாய் வத்தல், சிறுது பெருங்காயத்தூள் , கறிவேப்பிலை போட்டு தாளித்து , மசித்து வைத்தப் பருப்பில் சேர்த்து.... அடுப்பில் சிறிது நேரம் வைக்கவும்.... அதில் அரைத்த தேங்காய் சீரகத்தை சேர்த்து... கொத்தமல்லி இலை மற்றும் தேவையான உப்பை சேர்க்கவும்... கொதி வருவதற்கு முன்பே இறக்கிவிடவும்... சுவையான பருப்புக் குழம்பு தயார்......