பாடு நிலாவே
கவிஞர்களின்
பாடல் வரிகளுக்கு
உயிர் கொடுத்து ...!!
மக்களுக்கு உன்
மூச்சுக்காற்றை
இன்னிசையாக்கி ..!!
"ஆயிரம் நிலவே வா"
என்று பாடி மறைந்த
பாடு நிலாவே...!!
இன்று முதல்
இசை வானில்
நீ வெண்ணிலா...!!
என்றும் எங்களின்
உள்ளங்களில்
உன் "உதய கீதம்"
"மௌன கீதமாக"
இசைத்து
கொண்டே இருக்கும்
இந்த மண்ணுலகம்
மறையும் வரை...!!
--கோவை சுபா