பாலுவுக்கு பாட்டு அஞ்சலி

இலக்கணத்தில் பிழை செய்வோம் - அழகு
இலக்கியத்திலும் பிழை தொடரும்
இலக்கணப் பிழையினாலே இடர்பாடு நடப்பதுண்டு
இலக்கிய பிழைகளோ உயர் நவிற்சி என்றாகும்

பாடலை பாடமாக பாடினான் பாலு அன்று
பாலுவின் பாடலாலே பாருக்கும் சுகங்கள் உண்டு
பருவத்துக்கு உருவந்தந்து பாக்களை படினானே
பருவமே உருகி உருகி பலங்குன்றி போனதே இன்று

அருவமாய் இருந்தவாறே ஆட்சியை செலுத்தியபடியே
ஆரூயிர் மனிதரை எல்லாம் அதகளம் பண்ணும் இறையே
ஆன்மாக்கள் அமைதிக்கொள்ள அருமை குரலால் பாடல்
அழகாக பாடிய பாலுவை அழைத்துச் சென்றது ஏனோ

இந்நாளின் இலக்கணமாக இருந்த பாடல் பாலுவை
இட்டு வந்து மீண்டும் உடலில் புகுத்தி புதுபிறப்பு கொடு
இலக்கியம் மாறலாம் இலக்கணம் மாறலாமோ
இறைஞ்சி உம்மை தொழுகிறோம் ஏற்று வாழ்வளி.
------- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (25-Sep-20, 4:19 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 76

மேலே