எஸ்பிபி

இந்திய திரையுலகு இசைக்கு இன்று
இன்று ஓர் ஈடுசெய்யமுடியா இழப்பு
எஸ்.பி.பி என்ற அந்த இசைமேதையின் மறைவு
நினைத்தே பார்க்க முடியவில்லை இவர்
பாடி நம்மை மகிழ்வைத்த பாடல்கள்
எண்ணிக்கை நாற்பது ஆயிரத்திற்கும் மேலாம்
இவர் வெறும் திரைக்காக மட்டும் பாடியவரல்லர்
சின்னத் திரையிலும் கொடிகட்டி பறக்கின்றன
இவர் பாடிய பாடல்கள் ,,,,,,, இதையெல்லாம்
விட்டுவிடுவோம்.....

இவர் பாடிய பக்திப்பாடல்கள் .... மனதை
உருக்குபவை நாத்திகனையும் கொஞ்சம்
செவிகொடுத்து கேட்கவைக்கும்
அந்த திருப்பதி வெங்கடேசன் மீது...
ஐயப்பன் மீது மற்றும் தோத்திரங்கள்...
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்

இவர் 'சங்கராபரணம்' படத்திற்கு பாடிய
பாடிய பாடல்கள் அப்பப்ப அசாத்திய
பாடகர் இவர் என்பதற்கு அத்தாட்சி

இவர் ஒரு பாடகர் மட்டும் அல்ல
ஒரு குண சித்திர நடிகரும் கூட
இவர் நடித்த படங்களில் இவர்
பாத்திரம் 'சொடுபோனதில்லை
இப்படி இவர் குணச்சித்திர பாடகர், நடிகர்
குணச்சித்திர பாடகர் ஏனென்றால்
இவர் யாருக்கு பின்னணி பாட்டு பாடினாரோ
அவர் பாடுவதுபோலவே இருந்தனவே

அச்சோ காலனே இவரை ஏன்
கொண்டுசென்றாய் .... நீ
இரக்கமில்லாதவனே .......

மீண்டும் குணமடைந்து வருவார்
பாடுவார் மீண்டும் என்று நம்பிய
உள்ளங்கள் எத்தனையோ எத்தனையோ
ஸ்.பி.பி உன் மறைவில் இசை
உலகம் கண்ணீர்விடுகிறது
உள்ளதால்...நெஞ்சால்

எங்கள் உள்ளங்களில் நீ என்றுமே
சிரஞ்சீவி..... உன் பாடல்களுக்கு
காதலைப்போல் அழிவேது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Sep-20, 6:33 pm)
பார்வை : 109

மேலே