எஸ்பிபி

எஸ்.பி.பி

ஓடும் மேகங்களில் ஓசையை
எப்படிக் கண்டாயோ?
பொழியும் மழைதனைக் குலவி
இசையும் அமைத்தாயோ?

மண்ணிலிருந்து வெளிவரும் துளிர்களின்
மெல்லியச் சப்தத்தையும்
துல்லியமாக உணர்ந்து
பாடாலாக அமைத்தாயோ?

காண இயலாத கடவுளையும்
கானம் உனது மூலம்
கண்ணீர் மல்கி
அழைத்தணைத்தாயோ?

பாடத் தெறிந்தது பெண்குயிலுக்கு மட்டுமே
என நான் நினைத்திருக்கையிலே
உன்னிசையை உலகிற்கே உணர்த்திவிட்டாய்
இசைக்கு புது மெருகூட்டிவிட்டாய்


மண்ணிலே பிறந்து
மண்ணிலே மறைந்தாலும்
விண்ணளவு உனது சங்கீதம்
என்னுள் என்றும் நிலைத்திருக்கும்!

சம்பத் குமார்

எழுதியவர் : கல்கத்தா சம்பத் (27-Sep-20, 11:24 am)
பார்வை : 434

மேலே