அவள் முகம்
ஆதவனின் ஒளிவாங்கி மலர்ந்து அழகாய்
அலர்ந்த ஒளிரும் தாமரையோ உன்முகம்
இல்லை ரவியின் ஒளிர்வாங்கி ஆயின்
அனலாய் தகிக்காது தன்னொளி பரப்பும்
பூரண நிலவின் ஒளி தானோ உன்முகம்
இப்படி எண்ண எண்ண கவிஞனின்
கற்பனையில் வற்றா எழிலாய் நிற்கின்றாய்
என்னவளே இனியவளே