விருப்பமில்லாமல்
விருப்பமில்லாமல்
விடியலை காண
விருப்பமில்லா
முடிவுடன் கண்ணை
மூடினான்
விடியலின் மேல்
அவனுக்கு கோபமில்லை
விடிந்த பின் என்ன
செய்வது? என்ற
கேள்வியினால்தான்.
சூரியனை கூட
நம்ப முடியவில்லை !
சத்தமில்லாமல்
நிறத்தை மாற்றி
கொள்கிறான்
பகலில் வெளுப்பாகவும்
மாலையில் மஞ்சளாகவும்
அடங்கும் போது
சிவப்பாகவும்