வானவில்லே
ஆஹா , எத்தனை அழகு நீ
வானவில்லே உன்னைக்
கட்டிப்பிடித்து கொண்டுவந்து
மண்ணில் பூட்டிவைக்க ஆசை
நீயோ வானவில்லே நான் இதை
எண்ணி முடிக்கும் முன்னே
காணாது போய்விட்டாய்
கற்பனையில் நான் கண்ட
என் கனவு கன்னிபோல்