மறந்துவிட்டாய் என்னை நீ 555

***மறந்துவிட்டாய் என்னை நீ 555 ***


என்னுயிரே...என் வரவை எதிர்பார்த்து
காத்து கொண்டு இருக்கிறாய்...

இமைக்காத உன் விழிகளை
கொண்டு வாசல் கதவையே...

என்னை எதிர்பார்த்து
எதிர்பார்த்து உறைந்து விட்டதோ...

உன்
மை பூசிய கண்கள்...

மை பூசிய உன் விழிகளுக்குள்ளே
துடிக்குதடி இரு வின்மீன்கள்...

என் முகத்தில் விழிக்காதே
என்று சொல்லிவிட்டாய்...

உன் வார்த்தைகளை
மீறியதில்லை
நான் அன்றும் இன்றும்...

மறந்துவிட்டாய் என்னை

நினைக்காதே என்று சொல்வதற்கு...

அதனால்தான் வாழ்ந்து
கொண்டு இருக்கிறேன்...

உன்னை

நினைத்து கொண்டு...

நானும்

உன்னை ரசிக்கிறேன்...

உன்
கண்களுக்கு தெரியாமல்...

நான் ஜன்னல்
வழியே
பார்த்து கொண்டு...

நீ வாசல் வழியே
என்னை எதிர்பார்த்து கொண்டு.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (27-Sep-20, 9:32 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 688

மேலே