தீயில் வெந்து போவேன்

மூன்றாம் பிறையை
முழுநிலவாய்
மாற்றி வைப்பேன்.

விண்மீனின்
இமைகளை
எண்ணியே
நான் முடிப்பேன் .

காற்றை
நிறுத்தச் சொல்லி
கட்டளை நீயிட்டால்
கண்மூடி திறப்பதற்குள்
செய்து காட்டிடுவேன் .

கடல் நீர் முழுவதும்
குடிநீராய்
மாற்றி வைப்பேன் .

நித்தம் நித்தம்
சாகச்சொன்னால்
செத்தும் உயிர் வாழ்வேன் .

காதலியே!
உன்னை நான்
பாராமல்
இருந்துவிட்டால்
பஞ்சாய் நான் மாறி
என் காதல் தீயில்
வெந்து சாம்பலாவேன்.!!

எழுதியவர் : சு.இராமஜோதி (28-Sep-20, 6:08 am)
சேர்த்தது : ராமஜோதி சு
பார்வை : 268

மேலே