காந்தி மஹானுக்கு அஞ்சலி
' நாட்டிற்காக ஏற்றுக்கொண்ட நற்பணியை
நாடிய பலன் ஏதும் இல்லாது மேற்கொண்ட
உத்தமன் காந்தி தனது லட்சிய பாதையில்
மக்களை நடத்திச்சென்று கத்தி இன்றி
ரத்தம் இன்றி சுதந்திரம் வாங்கி தந்தார்
இப்படி கீதையில் கண்ணன் காட்டிய
உயர்ப் பாதையில் தெய்வப் பணியாம்
நாட்டுப் பணி செய்து மஹாத்மாவாய்
உயர்ந்த செம்மல் காந்தி மஹான்
மீண்டும் இத்தகைய மஹான் பிறந்திட
வேண்டுவதே இவருக்கு இன்று நான்
செலுத்தும் அவர் பிறந்த நாளின் அஞ்சலி