வககன்னியப்பன் குறட்பாக்கள்
பொங்குங் கடலோரம் பூமியிற் கண்டேன்நான்
வங்கக் கடலின் வனப்பு! 21
விழிப்புத்தான் யாவர்க்கும் வெற்றி தருமாம்;
எழுச்சியுடன் வாசி இனிது! 22
தடுப்பூசி போட்டுத் தளிர்போன்ற பிள்ளை
நெடுநாட்கள் வாழ்ந்திடச்செய் நீ! 23
எப்பாடு பட்டேனும் ஏற்றமிகு கல்வியைத்
தப்பாமல் கற்றல் தகவு! 24
உண்பதுவும் சோம்பி உறங்குவதும் இன்னாவாம்;
எண்ணெழுத்துக் கற்ப(து) இனிது! 25
வளமான வாழ்வுக்கு வல்லோரொ(டு) ஒன்றிக்
களிப்புடன் வாழக் கருது! 26
சொல்லொணாத் துக்கத்தில் சோம்பி இருத்தலினும்
மெல்லென நிற்பீர் மிளிர்ந்து! 27
காதலும் நேசமும் கண்முன் கனிந்துவர
ஏதமின்றிப் பொங்கும் இதம்! 28
தானமும் தர்மமும் தங்கிடும் நெஞ்சினில்
வானவர் வைப்பர் வளம்! 29
பொன்போல் குணத்தையே போற்றிடின் வாழ்வினில்
இன்பம் பெருகும் இனிது! 30