நீதியே நீதியே
நீதியே நீதியே
எங்கு செல்கிறாய்
நீந்தியே நீந்தியே
இங்கு வா
வீதியில் இறந்தாள்
நியாயம் புதைக்கப்பட்டது
சாம்பலாய் குவிந்தாள்
நியாயம் எரிக்கப்பட்டது
ஏழை மகளுக்கு
நீதி இல்லையா
ஏட்டில் எழுதும் எஜமானே
கோர்ட்டில் நீதிக்கு
உயிர் இல்லையா
ஒருமுனை தீர்ப்பெழுதுங்கள்
கருமுனை இழந்து இறந்தவளுக்கு
உறங்கும் பொய்மைகளை
உலுப்பி எழுப்புங்கள்
நியாயம் சற்று விழிக்கட்டும்
நீதி தேவதையே
நீயும் உறங்காதே
தராசு தட்டுகள்
சுமை தாங்காது
சமமான நீதியை கொடுத்து
அவள் மானம் காத்திடு...