வரம்

ரவி, நாளையோட (15 ஆகஸ்ட் 2020) வாட்ச்மேன் வேலைய இருபது வருஷம் செஞ்சி முடிச்சிருப்பான். நீங்க நினைக்கிற மாதிரி, அவன் ஒன்னும், எதோ, ஒரு கம்பெனி ல வாட்ச்மேன் வேலை பாக்கல. எமலோகத்துல, சொர்க்க வாசலுக்கு வெளிய பாக்கிற வேலை தான், இந்த வாட்ச்மேன் வேலை. நரகத்துல இருந்து யாரும் சொர்க்க வாசலுக்கு நுழையாம பாத்துக்கணுமாம்.

இருபது வருஷம் முன்னாடி,15 ஆகஸ்ட் 2000) - இன்னும் அஞ்சு நாளைல அவனுக்கு கல்யாணம், அக்கா பொண்ணு மீனா'வோட. வீட்டை விட்டு எங்கயும் போகாதான்னு , அவனோட அக்கா தேன்மொழி, மாமா சரவணன், மீனா சொல்லியும், பிரென்ட் ஆஹ் பாக்க போறேன்னு நைட் ஏழு மன்னிக்கு பைக் ல கிளம்பினான். அகலம் கம்மியான மெயின் ரோடு ல ஓரமா போயிட்டு இருந்தான். வண்டி ஓட்டும்போது, கல்யாண சிந்தனை தான் அதிகமா இருந்துச்சு. அவனோட பாதைல , ஓரத்துல, ஒரு பெரிய பள்ளம் வந்துச்சு. கவன குறைவுல, பிரேக் போடாம, வண்டி ய ரைட் சைடு நல்ல திடீர்னு திருப்பிட்டான். இதனால, தொடர்ச்சியா சத்தம் போட்டு பின்னாடி வந்த கார், கட்டுப்பாடு இழந்து , ரவியை இடிச்சுட்டு எதிர்பக்கம் வந்த லாரியோட மோதிடுச்சு.

இந்த விபத்துல, ரவி, கார் ஆஹ் ஓட்டிட்டு வந்தவர், முன்னாடி உட்கார்ந்து வந்த அவரது மனைவி மூணு பேரும் அதே இடத்துல அவுட். அதிர்ஷவசமா காருக்கு பின்னாடி உட்கார்ந்து வந்த , அவங்களோட மூணு வயது பெண்குழந்தை , சின்ன காயத்தோட தப்பிச்சுடுச்சு. லார்ரி டிரைவர் தான் ஆம்புலன்ஸ் கு போன் பண்ணி உதவி செஞ்சார்.

அன்னிக்கு எமலோகத்துக்கு போன, அவங்க மூணு பேரையும் எமதர்ம ராஜா சந்திச்சார். காரில் வந்த கணவன் மனைவி, இரண்டு பேரையும், சொர்க்க லோகத்துக்கு அனுப்பி விட்டார். அவர்கள், யாருக்கும் எந்த கெடுதலும் செய்திருக்கவில்லை. இந்த விபத்து வரை, ரவியும் யாருக்கும் கெடுதல் செய்திருக்கவில்லை. கவன குறைவினால், இந்த விபத்தை ஏற்படுத்திய, ரவி, இரண்டு உயிர் போவதற்கும் ஒரு குழந்தை அனாதையாக வாழவும் காரணமாகி விட்டான்.

இதை யோசிச்ச எம தர்ம ராஜா அவனிடம், "நீ மனதார, யாருக்கும் கெடுதல் நினைக்கவில்லை. இருந்தும் என்னால், உன்னை சொர்க்க லோகத்துக்கு அனுப்ப முடியாது. அதே நேரத்தில், உன்னை நரகத்துக்கு அனுப்பவும் எனக்கு மனமில்லை. உன் கவவன குறைவு மிக பெரிய விளைவை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால், உனக்கு நன் ஒரு வேறு தண்டனை தர இருக்கிறேன். இன்னும் இருப்பது வருடங்கள், நீ, சொர்க்க வாசலுக்கு காவலாளியாக கட்டாயம் வேலை பார்க்க வேண்டும். உள்ளே செல்ல முடியாது. பூலோகத்தில் என்ன நடக்கிறது என்பதையும் நீ அறிய முடியாது. இருபது வருடங்களுக்கு பிறகு, பூலோகத்தில் யாரேனும், உன்னை பற்றி , அப்போது கனவு காண்கிறார்கள் என்றால், அந்த முதல் கனவிற்கு மட்டும், உன்னை பூலோகத்துக்கு அனுப்புவேன். அந்த கனவு பத்து நிமிடம் நீடிக்கும். அந்த கனவு முடிவதற்குள், யார் கனவை காண்கிறார்களோ, அவர்களை நீ தொட்டு விட வேண்டும். இரண்டு பேரை தொட்டு பார்க்க மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்படும். பூலோகத்தை நீ அப்போது வழக்கம் போல பக்க முடியும். கேக்க முடியும். உன்னை யாராலும் பாக்க முடியாது. கேட்கவும் முடியாது. யார் கனவு காண்கிறார்களோ, அவரை தொடும் பொது மட்டும், உன்னாலும் அவர்களை , உணர முடியும், அவர்களாலும் உன் தொடு' தலை உணர முடியும். தவிர, உன் முகத்தையே, குரலையே அவராலும் கேக்க முடியாது. யாரேனும் கனவு கண்டு, நீயும் சரியாக அவர்களை தொட்டு விட்டால், சொர்க்க லோகத்துக்குள் அனுப்பப்படுவாய். சரியான நபரை தொடாமல் போனால், வேறு கனவு வாய்ப்பு அளிக்க பட மாட்டாது. மேலும், இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை, சொர்க்க வாசல் காவலாளி யாக தான் இருக்க வேண்டும்" என்று தனது தனது நீளமான தீர்ப்பை சொல்லி முடித்தார்.

நாம யாரை பெரும்பாலும் கனவுல பாக்கறோம்னா, யாரை ரொம்ப மிஸ் பண்றமோ அவங்களைத்தான். அது ஒரு ஆழமான அன்பின் வெளிப்பாடு. அப்படி, வேற யாரோ ஒருத்தரோட கனவுல நாம வந்தோம்னா அது அவங்க நம்ம மேல வச்சிருக்கிற அன்பு. அவங்களோட அன்பு, நமக்கு தர்மத்தோட பலனா கிடைக்கும். அப்படி ஒரு வாய்ப்பை தான் ராஜா, ரவிக்கு கொடுத்தாரு. அதை ரவி சரியாய் பயன்படுத்திக்க வேண்டும்.

ஏற்கனவே சொன்ன மாதிரி, ரவி, நாளையோட (15 ஆகஸ்ட் 2020) வாட்ச்மேன் வேலைய இருபது வருஷம் செஞ்சி முடிச்சிருப்பான். இன்னிக்கு (14 ஆகஸ்ட் 2020) அவனுக்கு தூக்கமே இல்லை. தன்னோட வாழ்க்கைய பின்னோக்கி பாக்க ஆரம்பிச்சான்.

ரவியோடு உடன் பிறந்தது தேன்மொழி மட்டும் தான். இவங்க ரெண்டு பேருக்கும் வயசு வித்தியாசம் பதினேழு. இவங்க அம்மா அப்பா கல்யாணம் ஆனதும் ஒரு வருஷத்துல தேன்மொழி பிறந்துட்டா. ரெண்டாவது குழந்தை பிறக்க என்னமோ ரொம்ப வருஷம் ஆயிடுச்சு. அதுக்கு அப்புறம்,பதினேழு வருஷம் கழிச்சி தான் ரவி பிறந்தான். பிரசவத்துல ஏற்பட்ட பிரச்சனைல அவங்க அம்மா அப்போதே இறந்துட்டாங்க. தேன்மொழி தான் ரவி குழந்தை யா இருந்ததுல இருந்து பார்த்துக்கிட்டா. ரவிக்கு ஆறு வயசு இருக்கிறப்போ, இவங்க அப்பா ஒரு மர்ம காய்ச்சல் ல இறந்துட்டாரு. சொந்த காரங்க எல்லாம், உடனே சரவணனை தேன்மொழி யோட கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. ரவி யையும் அவங்கலே பாத்துக்கிட்டாங்க. தேன்மொழி கு ஒரு வருஷம் கழிச்சி குழந்தை பிறந்தது. அது தான் மீனா. அவங்க வாழ்க்கை நல்லாவே போச்சு.

ரவிக்கு பாடுறதுனா இன்ட்ரெஸ்ட். 12 வது முடிச்சதும் கச்சேரி ல பாட ஆரம்பிச்சுட்டான். காலேஜ் ல யும் சேர்ந்தான். சுமாராத்தான் படிச்சான். இருந்தாலும் டிகிரி வாங்கிடணும்னு குறியா இருந்தான். டிகிரி முடிச்சிட்டு, முழு நேரம் பாட்டு ல கவனம் செலுத்தணும்னு இருந்தான். காலேஜ் ல இவன் கூட படிச்சவ, கவிதா. கவிதான ரவிக்கு ரொம்ப புடிக்கும். இவன் சைட் அடிக்றத, அவளும் அடிக்கடி ரசிச்சு இருந்திருக்கறா. ரெண்டு பேரும் வேற வேற காஸ்ட். காலேஜ் மூணாவது வருஷம் தொடக்கத்துல, கவிதா கிட்ட ரவி ப்ரொபோஸ் பண்ண, அவளும் ஓகே சொல்ல, அவங்க ரெண்டு பேருக்கும் ஒரே லவாங்கிஸ் தான்.

ஜாதி பிரச்னை இருக்கிறதால, அப்பா ஒத்துக்க மாட்டாருன்னு, கவிதாக்கு தெரியும். அதனால, காலேஜ் மூணாவது வருஷம் முடிஞ்சதும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருந்தாங்க. மூணாவது வருஷம் முடிஞ்சது. திட்டம் போட்டாங்க. கவிதா வீட்டை விட்டு கிளம்புற அன்னிக்கு, கையும் களவுமா அவளோட அப்பா கிட்ட மாட்டிக்கிட்டா. வீட்ல பிரச்சனை ஆகி, கடைசியில போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போய்டுச்சு. ஸ்டேஷன் ல இன்ஸ்பெக்டர் "அப்பா கூட வீட்டுக்கு போணுமா இல்லை ரவி கூட பொறியான்னு?" கேட்டப்போ, கவிதா, எதனாலன்னு தெரில, ஆனா, "அப்பா கூட போறேன், ரவி வேணாம்னு" சொல்லிட்டா. இன்ஸ்பெக்டரும், ரவி கிட்ட, "இனிமேல், கவிதாவை தொந்தரவு பண்ண கூடாதுன்னு" எழுதி வாங்கி, வார்ன் பண்ணியும் அட்வைஸ் பண்ணியும் அனுப்பி விட்டார்.

ரவி எவ்வளவோ ட்ரை பண்ணியும், அவனால, கவிதாகிட்ட பேச முடில. ஒரே மாசத்துல, கவிதாவை வேற ஒரு பையனோட அவளோட அப்பா, கல்யாணம் பண்ணி வச்சிட்டாரு.அது தெரிஞ்சதும் , வாழக்கையை வெறுத்து இருந்தான். கச்சேரில பட்றதுக்கும் போல, வேற வேலையும் பண்ணல. தேன்மொழி, சரவணன் எவ்வளவோ அட்வைஸ் பண்ணியும் அவன் மாறல. அப்போ மீனாக்கு பதினாலு வயசு தான் இருக்கும். அவளுக்கு அவன் மேல, ஒரு பரிதாபம் இருந்தது. நாளடைவில், அதையே, அவள் காதலா மாத்திக்கிட்டா. ஒரு வருஷம் கழிச்சி, ரவி கொஞ்சம் மாறினான், பாட ஆரம்பிச்சான்.

மீனா, பன்னண்டாவது முடிச்சதும் காலேஜ்க்கு போலன்னு சொல்லிட்டா. "ஏன்னு ?" ரவி கேட்டதுக்கு, அவன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணிட்டா. ரவிக்கு இது பிடிக்கல, ஸ்ட்ரோங் ஆஹ் முடியாதுன்னு சொல்லிட்டான். அன்னிக்கு நைட், மீனா, தற்கொலைக்கு முயற்சி பன்றேன்னு, பினாயில, குடிச்சுட்டா. அவளை ஹாஸ்பிடல் ஆஹ் அட்மிட் பண்ணாங்க. அஞ்சு நாள் கழிச்சி, டிஸ்சார்ஜ் பண்ணாங்க.

சரவணன் தேன்மொழி ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவு எடுத்தாங்க. மீனாவ பதினெட்டு வயசு ஆனதும் (இன்னும் ஒரு வருஷம் இருக்கு) ரவிக்கே கல்யாணம் பண்ணி கொடுத்துடலாம்னு, முடிவெடுத்தாங்க. ஆரம்பத்துல, ரவி தயங்கின்னாலும், அப்புறம் ஓகே னு சொல்லிட்டான்.

ரெண்டு பேரும் ஒரே வீட்டில், இருப்பதால், மீனா, தினமும், ரவியிடம் காதல் மொழில் பேசி வந்தால். ரவியும் ரசிக்க ஆரம்பித்தான். இவங்க லவ் ரொம்ப பேமஸ் ஆயிடுச்சு, ஊர்ல. உருகி உருகி லவ் பண்ணுங்க. ஒரு வருஷம் போய்டுச்சு.

(21 ஆகஸ்ட் 2000) அன்னிக்கு கல்யாணம் னு முகூர்த்தம் குறிச்சாங்க.

(15 ஆகஸ்ட் 2000)- அன்னிக்கு நைட் ஏழு மணிக்கு தான் விபத்து நடந்தது.

(flashback over)

மறுநாள் (15 ஆகஸ்ட் 2020) பிறந்தது.

ரவி வாட்ச்மன் வேலையை இருபது வருஷம் முடிச்சி இருந்தான். யாராச்சும் தன்னை கனவு காண்பர்களா என்று ஆவலோடு காத்து இருந்தான்.

அவனை பொறுத்த வரை, அவனை கனவில் காண விரும்புபவர்கள், மூன்று பேர்.
மீனா, தேன்மொழி, கவிதா. அதிலும், மீனா தான் அவன் முதல் சாய்ஸ்


நான்கு நாட்கள் ஆனது. அன்று அதிகாலை ஒரு அஞ்சு மணிக்கு, எம தர்ம ராஜா ரவியிடம் சென்றார். "உன்னை யாரோ ஒருவர், இப்போது கனவு காண ஆரம்பித்து இருக்கிறார். அவர்களை சரியாக கண்டுபிடித்து தொட்டு விடு. பத்து நிமிடமே கனவு நீடிக்கும். விதிமுறைகள் அனைத்தையும் நியாபகம் வைத்து கொள்". என்று சொல்லி உடனே அவனை பூலோகத்திற்கு அனுப்பி விட்டார்.

முதல் நிமிடம்:
மீனா வாக இருப்பதற்கே வாய்ப்பு அதிகம். அதனால், முதலில், கவிதாவிடம் சென்று அவளை , தொடாமல் ஒரு தடவை பார்த்து விடலாம் (முதல் காதலி அல்லவா ?). பின்பு, அக்காவையும் தொடாமல் பார்த்துவிட்டு, அதன் பின், முதலில், மீனாவை தொடலாம். ஒருவேளை, மீனா கனவு காணாமல் போயிருந்தால், அக்காவை தொட்டு விடலாம். இப்படி திட்டம் போட்டான்.

ரெண்டாவது நிமிடம்:
கவிதா வீட்டிற்கு வந்து விட்டான். மெத்தையில், ஒரு நபரோடு உறங்கிக்கொண்டு இருந்தாள். அவளின் கணவன், என்பதை, ரவியால் உணர முடிந்தது. "ஒரு தடவையாவது, அவளை அருகில் பார்க்க முடியுமா?" என்று முதல் காதலியை பற்றி நினைக்காத, ஆண் இந்த உலகத்துல இல்லன்னு தான் சொல்லணும். எதையோ சாதிக்க முடியாததை, செய்யதுபோல பூரிப்பு ஏற்பட்டது அவனுக்கு. அவளை ரசித்து ரசித்து பார்த்தான்.

மூன்றாவது நிமிடம்
மீனா வீட்டிற்கு வந்து விட்டான். பார்த்தால், தேன்மொழி வீட்டு வாசலை பெருக்கி கொண்டிருந்தாள்., சரவணன் வாசலில் டீ குடுத்திட்டு இருந்தான். ஆசையாய் அக்காவை பார்த்து கொண்டிருந்தான் ரவி. அக்கா கனவு காணவில்லை என்பது புரிந்தது.

நான்காவது நிமிடம்
வீட்டுக்கு உள்ளே பரபரபோடு நுழைந்தான். ஒரு ஐம்பது வயது நபர், ஹாலில் படுத்தி இருந்தார். அங்கு ஒரு கல்யாண போட்டோ இருந்தது. அதில், மீனாவும் இந்த நபரும். மீனா கல்யாணம் செய்து கொண்டால் என்பது ஆறுதலை தந்தாலும், அவள் வாழ்க்கையில் வேறு ஒரு நபர் தான் அவளுக்கு முக்கியம் என்பது அவனுக்கு ஒரு விதமான ஏமாற்றத்தை கொடுத்தது.

ஐந்தாவது நிமிடம்
வீட்டில் உள்ள ஒரு bedroom கு சென்றான். தனக்கு மனைவியாக வந்து இருக்க வேண்டியவள், அங்கு உறங்கி கொண்டிருந்தாள். அருகில், ஒரு பையனும் ஒரு பொன்னும் உறங்கி கொண்டிருக்கிறார்கள். பையன் ஆறாவது அல்லது ஏழாவது படிக்கலாம். பொண்ணு காலேஜ் படிக்கலாம். இவர்கள் இருவரும் அவளுடைய குழந்தைகள் என்பதை உணர்ந்தான். பழைய நியாபகங்கள் திரும்பி வந்தன. கண்ணுல லைட் ஆஹ் தண்ணி வர ஆரம்பிச்சது அவனுக்கு. மீனா வை தொடுவதற்கு முன்பு சில நொடிகள், அவளை நன்கு பார்த்து கொண்டே இருந்தான்.

ஆறாவது நிமிடம்
தனது இரண்டு கைகளாலும் அவளது கன்னத்தில் தொட சென்றான். ஆச்சர்யம், அவனால் தொட முடியவில்லை. மீனா இவனை நினைத்து கனவு காணவில்லை. ரவிக்கு ஏமாற்றம் இருந்தது. இருந்தும், "இன்று இவள் கனவு காணாமல் போயிருந்தாலும், இதுவரை, அவள், இவனை நினைத்து வருந்தியே இருப்பாள், இனியும் அப்படியே இருப்பாள்", என்பதை அவன் முழுமை யாய் நம்பினான். "இன்று அவள் இல்லை " அவ்வளவே என நினைத்தான்.

ஏழாவது நிமிடம்
நேரம் ஓடுவதை அறிந்தான். "ஓஹ், கடைசியில் கவிதாவா?" என நினைத்து சிலாகித்துக்கொண்டான். சில நொடிகள், மீனா மற்றும் இரண்டு பசங்களையும் பார்த்து இருந்தான். கிளம்ப ஆயத்தமானான். இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு தான் உள்ளது. "கவிதாவாக இருக்க வேண்டும்" என்று கடவுளிடம் வேண்ட ஆரம்பித்துவிட்டான்.

எட்டாவது நிமிடம்
மீனாவை கடைசியா ஒரு முறை ஏக்கத்தோடு பார்த்தான். அப்பொழுது, வெளியில் இருந்து வந்த தேன்மொழி, எதையோ எடுக்க, அந்த அறைக்கு வந்தாள். ஸிரோ வாட்ஸ் லைட் ஆப் செய்து, tube லைட் ஆன் செய்தாள். அந்த அறையில், இருந்த ரவியின் போட்டோ அவனுக்கு தெரிந்தது. அவனது போட்டோ வை பார்த்ததும் அவனுக்கு குதூகலம். அதில் எதோ எழுதி இருந்தது. நேரம் போவது தெரியாமல் , அதை படிக்க கிட்ட சென்றான்.

ஒன்பதாவது நிமிடம்
அதை படித்ததும், "தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும்" என்பதற்கு ஏற்றார் போல, எதை பற்றியும் யோசிக்காமல், உடனே, மீனாவின் பொண்ணோட கையை பிடிச்சு, அழ ஆரம்பிச்சான். அவனால அந்த தொடுதலை அவனால், உணர முடிச்சது. அந்த பொண்ணு தூக்கத்துல, இருந்து அலறி எழுந்து "அப்பா" கத்துனா


பத்தாவது நிமிடம்
ரவி யின் தண்டனை முடிவுக்கு வந்தது. அழுதுகிட்டே, இருந்த, அவனை, எம தர்ம ராஜா, அவனை சொர்க்க லோகத்துக்கு கூட்டிட்டு செல்ல, கிளம்பிட்டாரு.
பொண்ணு சத்தம் போடவும், எழுந்த மீனா, "ரவி மாமா (மீனாவிற்கு மாமா) கனவுல வந்தாரா ?" என கேட்க "அமாம், மா, அப்பா சாவுற மாதிரி இருந்தாரு, என்ன தொட்டதும் செத்துட்டாரு. அப்பா என்ன தொட்டது, நிஜத்துல தொடுத்த மாதிரியே இருந்தது" என முடித்தாள்.

(ரவியின் போட்டோவில் எழுதி இருந்தது: "I love you Dad and I miss you - Geetha Ravi")

நடந்து என்ன?

(14 August 2000) - தேன்மொழியும் சரவணனும் கல்யாண பத்திரிகை வைக்க பக்கத்துக்கு ஊரு செல்கிறார்கள். அன்று, ரவியும் மீனாவும் எல்லை மீறுகிறார்கள்.

(15 August 2000) - ரவி இறந்து விடுகிறான்.

(15 september 2000) - மீனாவிற்கு தான் கர்பம் என்பது தெரிய வருகிறது.

(16 september 2000) - சரவணன் மற்றும் தேன்மொழிக்கு விஷயம் தெரிய வருகிறது. கருவை கலைக்க அவர்கள் வறுபுறுத்த, மீனா மறுக்கிறாள். "உங்களுக்கு வெளிய சொல்லுகிறது அசிங்கமா இருக்கன்னு?" கேட்டு திடீரெனெ வெளியில், வீதிக்கு சென்று, ஊர்க்காரங்க முன்னாடி, "நான், கர்ப்பமா இருக்கேன், ரவி தான் அப்பா" னு சொல்லிட்டாள்.

(5 may 2001) - எல்லோரது விருப்பது எதிராக, கல்யாணம் ஆகாமலேயே, ரவியின் குழந்தையை பெற்றெடுக்கிறாள் மீனா, குழந்தைக்கு கீதா னு பேரும் வைக்கிறாள்.

(2006) - ரவி தான் உலகம் னு இருந்த மீனா, தனது, இருபத்தி நாலாவது வயதில், "தனக்கு ஒரு துணை தேவை " என முடிவு எடுக்கிறாள். விவாகரத்து ஆனா, தனது தூரத்து உறவினர் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறாள்.

(2007) - ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறாள்.

இதுவே நடந்தது.

இந்த உலகத்துல, எந்த ஒரு உறவும், கால ஓட்டத்தில் மாறுதலுக்கு உட்பட்டது தான். அது, இயற்கையின் நியதியும் தான்.

மாறாததுனா, ரெண்டே ரெண்டு தான், - அம்மா , அப்பா. இல்லாதவங்களுக்கு தான், அது புரியும், அதுக்கு ஒரு example தான் கீதா.

பெண் குழந்தைன்னா,
வரம் வாங்கி பெத்துகிறது இல்ல,
வரமாய் வந்து பிறந்ததும் இல்ல,
வரத்தை நமக்கு அள்ளி தர பிறந்தவ தான், பெண் குழந்தை.
எமன் தந்த சாபம், எம்மாத்திரம்!

எழுதியவர் : தமிழ்ச் செல்வன் (20-Oct-20, 7:54 pm)
சேர்த்தது : தமிழ்ச் செல்வன்
Tanglish : varam
பார்வை : 141

மேலே