மொழிவளரும்
மொழிவளரும்
விழித்திடுவீர் தமிழர்களே ! இனியும் நீங்கள்
விழியா திருந்தாலோ வீழும் தமிழே !
அழியாத தமிழ் நூலை அகத்தில் வைப்பீர் !
அறிவாலே உமையுயர்த்திக் கொள்வீர் ! என்றும்
பழியாதீர் பிறமொழியும் கற்பீர் ! அதுவே
வழியாகும் ! மொழிவளரும் காண்பீர் நீரே !