உன் முகவரி தேடி அலைகிறேன் 555
***உன் முகவரி தேடி அலைகிறேன் 555 ***
ப்ரியமானவளே...
அடைமழைபோல எப்போதும்
என்னுடன் விடாமல் பேசுபவள்...
இன்று கோடை மழைபோல
சுட்டெரிக்குதடி உன் மௌனம்...
உன் வாழ்வின் முகவரி
நான் என்று சொன்னவள் நீதான்...
இன்று உன் முகவரி
என்னவென்று தெரியாமல்...
நான்
தத்தளிக்கிறேனடி உன்னால்...
நீ எங்கு இருக்கிறாய்
என்ன செய்கிறாய்...
நீ மணமாலை சூடினாயா இல்லை
என்னைப்போல காத்திருக்கிறாயா...
தெரியாமலே
நான் துடிக்கிறேனடி...
ஒவ்வொரு கணமும்
என் ப்ரியமானவளே...
உன் முகவரி
தேடி அலைகிறேன்...
உன் முகவரி
எனக்கு கொடுத்துவிடடி.....
*முதல் பூ பெ.மணி.....*