கன்னத்தில் காய்ந்த கண்ணீரின் சுவடுகள் 555
***கன்னத்தில் காய்ந்த கண்ணீரின் சுவடுகள் 555 ***
என்னுயிரே...
ஆற்றங்கரை ஓரத்தில்
வீசும் தென்றலில்...
அசையும்
இலைகளின் ஓசையை...
உன் மௌன சிரிப்பில்
நான் தவறவிட்டேன்...
அதிகாலை
உன்
உன்
குறுந்தகவல் ஓசையில்...
குயில் குரலை
கேட்க மறந்தேன்...
நான் தவறவிட்ட இன்பங்களை
தனிமையில் ரசிக்கிறேன்...
என் இதயத்தின்
ஓரத்தில்
ஓரத்தில்
சிறியதொரு கீறல்...
அன்பை கொடுத்து
துன்பத்தை
வாங்கிய வருத்தம்...
வாங்கிய வருத்தம்...
கன்னத்தில் கோடிட்டு காட்டும்
காய்ந்த கண்ணீரின் சுவடுகள்...
உயிருக்கு
உயிராய் நேசித்து...
காதலை மறந்தவள் தந்த
சோகத்தின் ரேகை என் கன்னங்களில்...
நீ
என்னை மறந்தாலும்...
காலமெல்லாம் உன்
நினைவுகள் என்னை தொடருமடி.....