தீயாய் மாற வேண்டாம்
மேகத்தின் கண்ணீர்
ஜில்லென விழுந்தால்
நிலத்தின் சூடு அனைந்து போகுதே!
உன் மனத்தின் கண்ணீர்
சூடாய் இருந்தால்
என் மனத்தின் சூடு அதிகமாகுதே...
காதல் என்ற சொல்லில் அன்பு
சாதல் என்ற சொல்லாய் போனதோ? வெந்து போகும் யாவும் இங்கே சாம்பலாய் போகும்
உண்மை அதுதான் .
கண்ணே !
உந்தன் காதல் எனக்கு என்றும்
தீயாய்மாற வேண்டாம் அன்பே!!