காலம்
வருடங்கள் ஏற ஏற பழுதடையும் வீடுபோல
வருடங்கள் ஓட ஓட பழுதடையும் வண்டிபோல
உடுத்த உடுத்த பழையதாகும் உடைகள் போல
காலமே உந்தன் உடும்பு பிடியில் என்னையும்
இறுக சிக்கவைத்து எனக்கு நீ மூப்பு
தந்தாய் உனக்கேன் மூப்பிலையோ காலமே
உனக்கு முடிவும் இல்லையே !