மனிதனின் மனம்

உருவமுள்ள மனிதனின்
உள்ளத்தில்
உருவமே இல்லாமல்
இருக்கும் இடமும்
தெரியாமல்
மனிதனை
ஆட்டிப்படைக்கிறது
"மனம்"...!!

அந்த அலைபாயும்
மனதில் தான்
ஓராயிரம்....
எண்ணங்கள் தோன்றி
போராட்டக் களமாகிறது..!!

மனிதனின் மனதில்
தோன்றும் எண்ணங்களை
எல்லாம் வெளியே
சொல்ல முடியாது..!!

மனிதனின் மனம்
ரகசியங்கள் நிறைந்த
"குகை"...!!

மனிதர்களின்
உடல் நோய்க்கு
காரணம்....
அவனது மனமே....!!

உடல் நோய்க்கு
மருந்துண்டு
மன நோய்க்கு
மனிதனே மருந்து...!!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (7-Nov-20, 1:34 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : MANITHANIN manam
பார்வை : 637

மேலே