கனவுகள் உலவும் வீதி

கனவுகள் உலவும் வீதி
**************************
கார்மேகம் உலவும் வண்ண உலகத்தில் !
காற்றோடு காற்றாய் கலந்து வந்த!
என் சுவாசத்தின் உயிர் நாடியே !
ஏன் என்கண்ணில் பட மறுக்கின்றாய்!
அடி பெண்ணேஏன் ? என் எண்ணத்தையே !
அடித்து உதைத்து உதறி தள்ளுகிறாய் !
கனவுகள் உலவும் வீதி தன்னிலே !
கானக்குயில் ஏங்கி தவித்து நிற்கின்றாதடி!
காதல் என்னும் வானத்தில் பறந்து வா - பெண்ணே!
கனவுகள் சுமந்து அறியாத மொழி பேசி !
புதிய கனவு உலகில் வாழ்வோமே -பெண்ணே
கவி அகிலன் ராஜா
காலையடி யாழ்ப்பாணம்

எழுதியவர் : கவி அகிலன் ராஜா (9-Nov-20, 11:22 am)
பார்வை : 192

மேலே