வலியான தீபாவளி
வலியான தீபாவளி
நட்சத்திரங்களுக்கு போட்டியாய்
செயற்கையாய் ஒளிர்வதாலோ?
மேகத்தின் மோதலில்
எழும் இடியை விட
கிடுகிடுக்கும் ஒலியாய் கேட்பதாலோ?
பல லட்சம் தொழிலாளிகள்
வெடிமருந்தில் முழுகி குளித்து
பணி செய்வதாலோ
அதிக மாசு ஏற்படுவதாக கருதி
சத்தம் இல்லா
ஓளியோ ஒலியோ இல்லா
தீபாவளி வேண்டுமென்று
அறிவித்து விட்டார்கள்
பல மாநிலங்களில்
தினம் தினம்
மாசுக்களை வாரி
வழங்கும் மற்றவைகளை
கண்டு கொள்ளாமல் !
பட்டாசு தொழிலாளர்களுக்கு
மட்டும்
வருடா வருடம்
தீபம் வலியாகத்தான்
தெரிகிறது