தாய்மை

பத்து மாதம் சுமையை இறக்கி வைத்த உனக்கு
பத்து நிமிடம் அமர நேரமில்லையா உனக்கு
நான் தூங்கி எழும் முன் சென்றாய்
நான் தூங்க சென்ற பின் வந்தாய்

கல்லும் , மண்ணும், சுமந்து வாங்கிய பணத்தை
கல் அரிசியாகவும், மண் பருப்பாகவும் மாறிய பணத்தை
புகை தள்ளும் விறகை எரித்து விட்டாய்
புகைச் சோறு பொங்கி வயிற்றை நிரப்பி விட்டாய்

நான் ஈன்று எடுத்த சிசு என் அருகில் இருக்கும்போது
நான் கலங்கினேன் - என்னை ஈன்ற தாய் அருகில் இல்லை என்று
அலைபேசி இரவல் வாங்கி என்னிடம் பேசியபோது
அலை பாயுதே என் மனம் உன் அருகில் இல்லை என்று

தாய்மையை பற்றி புரிந்துகொண்டேன் நான் தாயானபோது
தாய் யின் வலியை புரிந்துகொண்டேன் என் குழந்தையை ஆளாக்கும் போது

எழுதியவர் : தெய்வா (13-Nov-20, 12:58 pm)
Tanglish : thaimai
பார்வை : 172

மேலே