என் இனிய எதிரியே

நெஞ்செல்லாம் விஷமாய்
நினைவெல்லாம் துரோகமாய்
நாவெல்லாம் தேனாய்
பழம் நழுவி பாலில்
அது நழுவி வாயில் விழ
அன்பொழுக பேசி
அனைவரையும் விழுத்தாட்ட
உன்னால் மட்டுமே முடியும்.

எழுதியவர் : இவானா (15-Nov-20, 1:00 pm)
சேர்த்தது : இவானா
பார்வை : 296

மேலே