மனங்கொத்தி

நீ
எய்த அம்புகளை
எடுத்தெறிந்த
காயங்கள் ஆறுமுன்னே
வெள்ளைக்கொடியுடன் நீ
வேகமாய் வர
மனசெல்லாம்
மத்தாப்பூவாய் நான்

சமாதானம்
என்பதே அடுத்த
சண்டைக்கென
அறிவு எச்சரிக்க
உள்ளம் ஊமையாய் அழுகிறது

எழுதியவர் : இவானா (15-Nov-20, 5:36 pm)
சேர்த்தது : இவானா
பார்வை : 113

மேலே