புத்தகங்கள்
வாழ்க்கையின் முன்னால்
வருட(காலண்டர்) புத்தகங்கள்
நேர்மையின் முன்னால்
சத்திய புத்தகங்கள்
வழக்கறிஞர்க்கு முன்னால்
சட்ட புத்தகங்கள்
வர்ணிப்பவரின் முன்னால்
கவிதை புத்தகங்கள்
நேசிப்பவரின் முன்னால்
காதல் புத்தகங்கள்
சாதனைகளுக்கு முன்னால்
வெற்றியின் புத்தகங்கள்
தோல்விக்கு முன்னால்
அவமானத்தின் புத்தகங்கள்
நோய்களுக்கு முன்னால்
மருத்துவ புத்தகங்கள்
மனிதர்களுக்கு முன்னால்
எத்தனை புத்தகங்கள்
"எல்லாமே புத்தகங்கள்
புத்தகங்கள்தான் எல்லாமே"
நேசிப்பவரை பொறுத்தே
புத்தகங்கள் வாசிக்கப்படுகின்றன
வாசிப்பவரை பொறுத்தே
புத்தகங்கள் நேசிக்கப்படுகின்றன...
இளம் கவியரசு : அப்துல் பாக்கி